Controversy hits Thalaivaa makers for music royalty (தமிழ்)
Tuesday, July 16, 2013 Tamil Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
தலைவா இசை ராயல்டி சிக்கலா..?!
விஜய் நடிக்கும் தலைவா படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பாடலாசிரியர்கள் மதன்கார்க்கி, முத்துகுமார், தாமரை ஆகியோருக்கும் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினுக்கும் திடீர் மோதல் ஏற்பட்டிருக்கிறது.
தலைவா படத்தின் ஆடியோ உரிமையை பிரபல ஆடியோ நிறுவனம் வாங்கியிருக்கிறது. இந்த நிறுவனம் வழக்கமாக எந்த படத்தின் ஆடியோ உரிமையை வாங்கினாலும் இசை, பாடல் உட்பட அனைத்து டிஜிட்டல் உரிமைகளையும் வாங்கிக் கொள்ளும். அதோடு, யூ டியூப் மூலம் ரசிகர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தயாரிப்பாளருக்கு ராயல்டி தொகை வழங்குவோம் எனவும் கூறுவார்கள்.
இந்த சூழலில், விஜய் நடிக்கும் தலைவா படத்தின் ஆடியோ உரிமையை பெற்ற பிரபல இசை நிறுவனமும், வழக்கமான பாணியில் இசையின் உரிமை முழுவதும் தனது நிறுவனத்திற்கு சொந்தம் என சொல்லும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடும்படி படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷிடம் கேட்டுக் கொண்டது. ஆனால், அப்படி கையெழுத்து போட ஜி.வி. மறுத்து விட்டார்.
இதேபோல, பாடல் உரிமைகளையும் அந்த நிறுவனத்திற்கு எழுதி தரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட பாடல் எழுதிய மதன்கார்க்கி, முத்துகுமார், தாமரை ஆகியோர் மறுத்து விட்டனர். தயாரிப்பாளர் அனுப்பிய ஒப்பந்த கடிதங்களை அவர்கள் திருப்பி அனுப்பிவிட்டனர்.
இந்த சூழலில், ஜி.வி.பிரகாஷ் தனது டிவிட்டர் வலைதளத்தĬ
Follow us on Google News and stay updated with the latest!
Comments